கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய படங்களின் ஹிட் மூலம் முன்னணி நடிகராகியுள்ளார். அடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள டியூட் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகிறது.
இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரதீப்புடன் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நாளை ரிலீஸாகவுள்ள இந்த படத்துக்குத் தமிழ்நாடு தாண்டியும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர்களில் ஒருவரான நவீன் படம் பற்றி பேசும்போது “இந்த படத்தின் மூலம் எங்களுக்கு ரிலீஸுக்கு முன்பே சுமார் 35 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. டிராகன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனபோது ப்ரதீப் சம்பளத்தை அதிகமாகக் கேட்கவில்லை” எனக் கூறியுள்ளார்.