கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய படங்களின் ஹிட் மூலம் முன்னணி நடிகராகியுள்ளார். அடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள டியூட் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸானது.
இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரதீப்புடன் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் இந்திய அளவில் 11 கோடி ரூபாய் முதல் நாளில் வசூலித்ததாக சொல்லப்பட்ட ட்யூட் திரைப்படம் உலகளவில் 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை எளிதாக எட்டிவிடும் என சொல்லப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் ப்ரதீப்பின் ஹாட்ரிக் நூறு கோடி ரூபாய் வசூலாக அமையும்.