அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். இந்த படத்தின் வெற்றி காரணமாக கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார் விக்னேஷ் ராஜா. தற்போது தனது இரண்டாவது படமாக தனுஷை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டும் தொடங்குவதில் தாமதம் ஆனது. இந்நிலையில் ஜூலை 11 ஆம் தேதி பூஜையோடு படப்பிடிப்பு தொடங்கியது. சென்னையில் சிலக் காட்சிகள் அரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு பின்னர் முக்கியமானக் காட்சிகள் ராமநாதபுரத்தில் படமாக்கப்பட்டன.
சென்னையில் அரங்கு அமைக்கப்பட்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது ராமநாதபுரத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை படத்தொகுப்பு செய்து படக்குழு பார்த்துள்ளது. அந்தக் காட்சிகளைப் பார்த்து தனுஷும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் இயக்குனர் விக்னேஷ் ராஜாவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்களாம்.