இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய படங்களின் ஹிட் மூலம் முன்னணி நடிகராகியுள்ளார். அடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள டியூட் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகிறது.
சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரதீப்புடன் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பிரேமலு படத்தின் வெற்றியால் மமிதா பைஜு தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரிய ஆதரவைப் பெற்றுள்ளார். இதனால் ட்யூட் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் ட்யூட் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் “நான் ஆசக் கூட பாடலை உருவாக்கியபோது முதலில் என் நினைவுக்கு வந்தது மமிதாதான். அவரது எனர்ஜியும், அதிர்வலையும் அந்த பாடலுக்கு சரியாகப் பொருந்தியிருக்கும். அது சம்மந்தமாக நான் அப்போது அவரிடம் பேசினேன். ஆனால் அவர் அப்போது வேறு ஷூட்டிங்கில் இருந்ததால் நடக்கவில்லை. விரைவில் எதிர்காலத்தில் நாங்கள் ஒரு பாடலுக்காக இணைவோம்” எனக் கூறியுள்ளார்.