கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனார். தற்போது ஜெயிலர் 2 படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து சிகிச்சை எடுக்க அமெரிக்கா சென்றார். அங்குள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அவரது சிறுநீர்ப் பை வெற்றிகரமாக அகற்றப்பட்டு குடலில் இருந்து செயற்கையாக ஒரு சிறுநீர்ப்பை உருவாக்கப்பட்டு பொறுத்தப்பட்டது. தற்போது அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் அளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் சர்வைவர் என்ற பெயரில் அவரின் இந்த புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சைப் பயணத்தை ஆவணப்படமாக தயாரிக்கிறார் சிவராஜ்குமாரின் மனைவி. இந்த படத்தை பிரதீப் சாஸ்திரி எழுதி இயக்குகிறார். சமீபத்தில் சிவராஜ்குமாரின் 60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டது.