பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்" என அமெரிக்க அதிபரின் அச்சுறுத்தலை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்டுள்ளது. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 607 புள்ளிகள் சரிந்து 85,522 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி 197 புள்ளிகள் சரிந்து 25,150 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, நெஸ்ட்லே இந்தியா, சன் பார்மா, டாடா கன்சியூமர் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும், மற்ற அனைத்து பங்குகளும் சரிவில்தான் வர்த்தகமாகி வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்திய பொருளாதார வல்லுநர்கள் அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இதற்கு ஒரு தீர்வு கண்டவுடன் பங்குச்சந்தை மீண்டும் உயரும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.