தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான கோட்டா சீனிவாசராவ் நேற்று வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். அதையடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணிக் கலைஞர்கள் இறுதி மரியாதை செலுத்த அவரது வீட்டுக்கு வந்தனர்.
அப்பொது சினிமா பிரபலங்களைக் காண ரசிகர்கள் வீட்டை சூழ்ந்தனர். ஊடகத்தினரும் இறப்பு நிகழ்வை ஒளிபரப்ப வீட்டின் முன் கூடினார். அப்போது இயக்குனர் ராஜமௌலி கோட்டா சீனிவாசராவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வரும் போது அவரைப் பின்தொடர்ந்து சென்று ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க முயன்றார்.
அதைத் தவிர்த்துக்கொண்டே நடந்து சென்ற ராஜமௌலி ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் அவரைக் கண்டித்து திட்டிவிட்டு தன் காரில் ஏறி சென்றார். இது சம்மந்தமான காணொளித் துணுக்கு இணையத்தில் பரவ ரசிகர்களின் இந்த கேவலமான மனநிலைக் குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளனர். ஒரு துக்க வீட்டில் இப்படியா நடந்துகொள்வது என அதிருப்தியை வெளியிடும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றனர்.