Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நானும் ஒருநாள் ஆஸ்கார் வாங்கிவிடுவேன்: விக்னேஷ் சிவன்

Advertiesment
நானும் ஒருநாள் ஆஸ்கார் வாங்கிவிடுவேன்: விக்னேஷ் சிவன்
, திங்கள், 25 பிப்ரவரி 2019 (21:15 IST)
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 2019ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் என்ற ஒரே குறும்படம் மட்டுமே இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதினை வென்றது
 
இந்த நிலையில் நானும் ஒருநாள் ஆஸ்கார் விருதை வாங்கிவிடுவேன் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து போட்டோ ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் ஆஸ்கார் விருது என்ற எழுதப்பட்ட கதவருகே விக்னேஷ் சிவன் நின்று கொண்டிருப்பது போல் உள்ளது.
 
இந்த புகைப்படத்தின் கீழே 'ஒருநாள் கதவு திறக்கும், அருகில் இருப்பதே நமது வேலை' என்று கூறியுள்ளார். மேலும் இந்த வருடம் ஆஸ்கார் விருது வென்ற  அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். 
 
webdunia
இயக்கம் மட்டுமின்றி அவ்வப்போது பாடல்களையும் எழுதி வரும் விக்னேஷ் சிவன், என்றாவது ஒருநாள் இயக்கம் அல்லது பாடலுக்கு ஆஸ்கார் விருதினை பெறுவார் என்று டுவிட்டர் பயனாளிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு மட்டும் வாழைப்பழம்: வைரலாகும் ஓவியாவின் '90ml' புதிய வீடியோ