Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாடல் காட்சிக்காக நியுசிலாந்து பறக்கும் ஷங்கரின் “RC15” குழு!

பாடல் காட்சிக்காக நியுசிலாந்து பறக்கும் ஷங்கரின் “RC15” குழு!
, திங்கள், 24 அக்டோபர் 2022 (15:32 IST)
இயக்குனர் ஷங்கர் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. படத்தில் வில்லனாக தற்போது இயக்குனர் & நடிகர் எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளார்.

இப்போது இந்தியன் 2 மற்றும் RC 15 படங்களின் படப்பிடிப்பை ஒரே நேரத்தில் நடத்தி வருகிறார் ஷங்கர், ராம்சரண் படத்தின் ஒரு பாடலுக்காக அடுத்த மாதம் நியுசிலாந்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் ஒப்பந்தம் ஆகும் நடிகை நீது சந்திரா!