Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் ரஜினி & இயக்குனர் ஷங்கர் படங்கள் ரிலீஸா?

ஒரே நாளில் ரஜினி & இயக்குனர் ஷங்கர் படங்கள் ரிலீஸா?
, திங்கள், 24 அக்டோபர் 2022 (08:01 IST)
ரஜினி நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் இயக்குனர் ஷங்கரின் RC 15 படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களோடு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அதே நாளில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துவரும் படமும் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இரண்டுமே பேன் இந்தியா திரைப்படங்களாக உருவாகி வரும் நிலையில் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் போதுமான அளவுக்கு திரையரங்குகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியானது உதயநிதியின் கலகத் தலைவன் டீசர்!