Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிவோன் கான்வாய் அபார ஆட்டம்… ஆஸிக்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியுசிலாந்து!

டிவோன் கான்வாய் அபார ஆட்டம்… ஆஸிக்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியுசிலாந்து!
, சனி, 22 அக்டோபர் 2022 (14:39 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இதுவரை பயிற்சி ஆட்டங்கள் மற்றும் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்று முதல் சூப்பர் 12 லீக் போட்டிகள் தொடங்கி உள்ளன. இன்றைய முதல் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 200 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் டிவொன் கான்வாய் அபாரமாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பின் ஆலென் 16 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆஸி அணி தற்போது பேட்டிங்கை தொடங்கியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு