Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்வி நிறுவனங்களை மதங்களின் பெயரால் உருவாக்கியது சரியா? இயக்குனர் சீனு ராமசாமி கேள்வி!

Advertiesment
கல்வி நிறுவனங்களை மதங்களின் பெயரால் உருவாக்கியது சரியா? இயக்குனர் சீனு ராமசாமி கேள்வி!
, புதன், 9 பிப்ரவரி 2022 (16:27 IST)
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்வர்கள் போராட்டம் நடத்துவது குறித்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

கர்நாடகாவில் உள்ள இரண்டு அரசுக் கல்லூரிகளில் மாணவிகள் இஸ்லாமிய முறையப்படி ஹிஜாப் அணிந்துவருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் இந்து மாணவர்கள் காவித்துண்டை அணிந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமில்லாமல் ஹிஜாப் அணிந்த மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டொம் என ஆர்ப்பாட்டம் செய்தும், அப்படி வரும் மாணவிகளிடம் சென்று ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பியும் நடந்துகொண்டது நாடு  முழுவதும் கவனிக்கப்பட்டு இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவுக்குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘உனது உடை, உனது மொழி, உனது கடவுள், உனது உரிமை, உனது இந்தியா, நம் தாய்நாடு. இந்தியா ”மதச்சார்பற்ற நாடா? அல்லது மதசகிப்பு தன்மை கொண்ட நாடா? இந்திய அரசியல் சாசனம் என்ன சொல்கிறது? முதலில் கல்வி நிறுவனங்கள் யாவும் மதங்கள் ஜாதிகளின் பெயரால் உருவாக்கியது சரியா? காலை பள்ளி அசெம்பிளியில் தேசிய கீதம் & தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் ஒலிக்குமா?’ என்றும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கும்பலாக வந்து தன்னை துன்புறுத்தியவர்களிடம் தைரியமாக அல்லாஹு அக்பர் என்று கூறிய பெண்ணின் புகைப்படத்தையும் பகிர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியில் அறிமுகமாகும் விஜய் ஆண்டனி… இயக்குனர் இவரா?