Publish Date: Wed, 09 Feb 2022 (13:25 IST)
Updated Date: Wed, 09 Feb 2022 (13:39 IST)
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,322 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனோ தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆம், கல்வி நிறுவனங்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,322 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை பெற்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர்.