நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அடுத்து இந்தியில் நடிகராக அறிமுகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம்வந்து கொண்டிருந்த விஜய் ஆண்டனி, ஒரு கட்டத்தில் நடிப்பின் மேல் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக நடிகரானார். அவர் நடிப்பில் வெளியான நான், சலீம் மற்றும் பிச்சைக்காரன் ஆகிய படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கென்று ஒரு மார்க்கெட் உருவானது. தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டிய விஜய் ஆண்டனி ஒரு கட்டத்தில் இசையமைப்பதையே நிறுத்தினார்.
இப்போது பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் இந்தி மற்றும் தமிழில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சந்தொஷ் சிவன் இயக்க உள்ளாராம். இதன் மூலமாக இந்தி சினிமாவில் கால்பதிக்க உள்ளார் விஜய் ஆண்டனி.