Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு விருது!

Advertiesment
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு விருது!
, புதன், 9 பிப்ரவரி 2022 (12:42 IST)
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வீரத்தோடு தனது கல்லூரிக்குள் நுழைந்த மாணவிக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


 
கர்நாடக மாநிலம் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மாணவிகள் ஹிஜாபுக்கு ஆதரவாக நூதன போராட்டங்கள் மேற்கொண்டதும், அவை சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் கர்நாடக  மாநிலம் ஷைமோகாவில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய கல்லூரி மாணவியை துரத்திச் சென்று ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டனர் மாணவர்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமான அந்த மாணவி தைரியமாக ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து  நகர்ந்தார். 
 
இதனிடையே கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வீரத்தோடு தனது கல்லூரிக்குள் நுழைந்த மாணவிக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வீரமங்கை முஸ்கானுக்கு தமுமுகவின் பாத்திமா ஷேக் விருது வழங்கப்படும் என ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் 40 மணி நேரத்திற்கும் மேல் மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு!