Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருவா படத்தில் அருண் விஜய் –இயக்குனர் ஹரி அதிரடி முடிவு!

அருவா படத்தில் அருண் விஜய் –இயக்குனர் ஹரி அதிரடி முடிவு!
, சனி, 8 ஆகஸ்ட் 2020 (18:11 IST)
சூர்யா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்குவதாக இருந்த அருவா திரைப்படம் இப்போது கைவிடப்பட்டதாக தெரிகிறது.

சில மாதங்களுக்கும் முன்னதாக சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ‘அருவா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஸ்டுடியோ கிரின் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இப்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கும் பெயரிடாத படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கே ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்போது அருவா படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அருவா கதையை லேசாக மாற்றி தனது மனைவியின் தம்பியான அருண் விஜய்யை வைத்து இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான பூஜை சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக் பாஸ் நிழ்ச்சி.. தொகுப்பாளருக்கு ரூ.16 கோடி சம்பளம்… செம எண்டர்டெயின்மெண்ட் ரெடி!