Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடி கொஞ்சம் ஓவரோ...? சூர்யாவை புறக்கணித்த பார்வதி - சில நிமிடத்தில் வெளியிட்ட அறிக்கை!

Advertiesment
VJ parvathy
, சனி, 8 ஆகஸ்ட் 2020 (06:37 IST)
கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய டுவிட்டுகளையும் வீடியோக்களையும் பதிவு செய்து வரும் மீராமிதுனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன என்பது தெரிந்ததே. குறிப்பாக விஜய் மற்றும் சூர்யா குறித்தும் அவர்களது மனைவிகள் குறித்தும் மீராமிதுன் தெரிவித்த கருத்துக்கள் இருதரப்பு நடிகர்களின் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் குறித்து ஜோ மைக்கேலை பேட்டி எடுத்தார் Vj பார்வதி. அந்த பேட்டியின் போது விஜய்யை தளபதி என்று குறிப்பிட்ட பார்வதி சூர்யாவை அந்த நடிகர் என்று குறிப்பிட்டார். அதற்கு ஜோ மைக்கேல், அது என்ன அந்த நடிகர்..?  அவரின் பெயரை சொல்லலாமே என்று சொல்லியும் பார்வதி , சூர்யாவின் பெயரை சொல்லாமல் மழுப்பினார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாக இந்த விஷயம் குறித்து அனைத்திந்திய சூர்யா ரசிகர்களின் ஆன்லைன் ஒருங்கிணைப்பாளர் ஹரி என்பவர் பார்வதியை போனில் தொடர்பு கொண்டதாக பார்வதி தெரிவித்துள்ளார்.

அதையடுத்து  சூர்யா ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்ட பார்வதி அதில்,  "என்னுடைய பேட்டிகளில் நான் சூர்யாவை புறக்கணிப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அப்படி எதுவும் நான் செய்யவில்லை. சூர்யாவின் சமூக சேவைக்கும் நான் மிகப்பெரிய ரசிகை. அவரைப் பேட்டி காண நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் இதை வேண்டுமென்றே செய்யவில்லை என்று கூறி தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா லாக்டவுனிலும் ஷூட்டிங் – லண்டன் பறந்து சென்ற படக்குழு!