சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஆவலாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய மூன்று படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக மாறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து அவர் இயக்கத்தில் ரஜினியே ஆர்வமாக கதைக் கேட்டுள்ளார் என்றால் அவரின் வளர்ச்சியைப் பற்றி சொல்லவேண்டுமா.
இந்நிலையில் இப்போது நடிகர் சூர்யாவும் லோகேஷுடன் இணைந்து ஒரு படம் பண்ண ஆவலாக இருப்பதாக தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளாராம். கைவசம் உள்ள ஒரு தெலுங்கு படம், ரஜினி படம் ஆகியவற்றை முடித்துவிட்டு கைதி 2 படம் பண்ண இருக்கிறார் லோகேஷ். அதன் பின்னர் சூர்யாவுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.