Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் படத்து ஹீரோயின் எல்லாம் என்ன புர்கா போட்டா நடிக்கிறாங்க –ரசிகருக்கு மீரா மிதுன் பதில்!

Advertiesment
விஜய் படத்து ஹீரோயின் எல்லாம் என்ன புர்கா போட்டா நடிக்கிறாங்க –ரசிகருக்கு மீரா மிதுன் பதில்!
, வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (17:56 IST)
விஜய்யின் ரசிகர் மன்ற தலைவர் ஈ சி ஆர் சரவணன் மீரா மிதுனின் உடைகளைப் பற்றி விமர்சனம் வைத்த நிலையில் அவருக்கு பதிலளித்துள்ளார் மீரா மிதுன்.

மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா இருவரையும் மோசமாக விமர்சித்தது சமூகவலைதளத்தில் கொதிநிலையை உருவாக்கியுள்ளது. இதனால் கோபமான அவ்விரு நடிகர்களின் ரசிகர்கள் மீராவை ஆபாச அர்ச்சனையில் மூழ்க வைத்துள்ளனர். அதில் ஒரு சிலர் ஆபாசமாக மீராவை திட்ட இப்போது மீரா பதிலுக்கு சூர்யா மற்றும் விஜய் ரசிகர்களுக்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இனிமேல் என்னை ஆபாசமாக பேசினால் ‘நானும் பதிலுக்கு ஜோதிகா மற்றும் சங்கீதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவேன் (சில ஆபாசமான வார்த்தைகளை சொல்கிறார்). மேலும் என்னைத் திட்டுவதை விட்டு நான் சாதித்த அளவுக்கு நீங்களும் சாதியுங்கள்’ எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

இதையடுத்து விஜய் ரசிகர்கள் மீரா மிதுனுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர். விஜய்யின் ரசிகரும் அவருக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவருமான ஈ சி ஆர் சரவணன் என்பவர் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ‘ஒருவரின் நடிப்பைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட குடும்ப வாழ்வை விமர்சிக்கக் கூடாது. மீராமிதுன் தான் பேசியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவரை யாரும் படங்களில் புக் செய்ய கூடாது. அப்படி செய்தால் நாங்கள் போராட்டம் செய்வோம்’ எனக் கூறியுள்ளார். மேலும் அவர் மீரா மிதுன் கவர்ச்சியாக உடை அணிவதைப் பற்றியும் விமர்சனம் வைத்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக மீரா, ’விஜய் ரசிகர் மன்ற தலைவர் சரவணன் என்னுடைய உடைகளை பற்றி கமெண்ட் செய்துள்ளார். இவர்களுக்கெல்லாம் இன்னொருவரின் உடையைப் பற்றி பேச யார் உரிமை கொடுத்தது. இதற்கிடையில் விஜய் படத்தில் நடிக்கும் பெண்கள் எல்லாம் ஒன்றும் புர்கா அணிந்து நடிக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜி பி முத்து மீது போலிஸில் புகாரளிக்கும் மீரா மிதுன் – உச்சத்தில் இணைய மோதல்!