நடிகர் விக்ரம்மின் மகனான துருவ் ஆதித்யா வர்மா மற்றும் மகான் ஆகிய இரு படங்களில் நடித்து நல்ல அறிமுகத்தைப் பெற்றார். ஆனால் அந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட்டடிக்கவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்காமல் துருவ் மிகப்பெரிய இடைவெளியை எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் இப்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் –காளமாடன்” என்ற படத்தில் கபடி வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் தீபாவளிக்குப் படம் ரிலீஸாகிறது.
இதையடுத்து துருவ் விக்ரம் மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. தெலுங்கில் ஹிட் அடித்த கில் படத்தைத் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் தெலுங்கில் பெல்லகொண்டா சீனிவாச ராவும் தமிழில் துருவ் விக்ரமும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.