கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி மற்றும் பேரன்பு எனக் காத்திரமானப் படங்களை இயக்கி தனக்கென ஒரு பாணியைப் பின்பற்றும் இயக்குனர் ராம் அடுத்து மிர்ச்சி சிவா, அஞ்சலி மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் பறந்து போ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரான நிலையில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டது. தற்போது இந்த படத்துக்கானப் ப்ரமோஷன் பணிகளில் ராம் ஈடுபட்டு வருகிறார்.
அப்படி அவர் அளித்த நேர்காணலில் தன்னிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி இப்போது முன்னணி இயக்குனராகிவிட்ட மாரி செல்வராஜ் பற்றி பேசியுள்ளார். அதில் “மாரி செல்வராஜ் மிக வேகமாக படம் எடுக்கிறார். நான் அவர் விரைவில் பேன் இந்தியா அளவில் இருக்கும் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனக்குப் பிடித்த நடிகர் ஷாருக் கான். அவர் நடிப்பில் மாரி செல்வராஜ் ஒரு படம் இயக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.