தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பி பிரபலம் ஆனார் ஸ்ரீரெட்டி. அவர் குற்றச்சாட்டுகளில் சில தமிழ் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களும் அடக்கம். அவரின் குற்றச்சாட்டுகளால் தெலுங்கு சினிமாவில் இருந்து ஓரம்கட்டப்பட்டு தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
தமிழ் சினிமாவிலும் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் நேர்காணல்கள் மற்றும் யுடியூபில் ஒரு சமையல் சேனலை நடத்தி வாழ்க்கையை நடத்தி வருகின்றார். அவரின் யுடியூப் சேனலை வெளியாகும் சமையல் வீடியோக்களில் அவர் கவர்ச்சியாகத் தோன்றுவது அவருக்கு பெருமளவில் ஆதரவையும் அதே நேரத்தில் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் அதுபற்றி ஸ்ரீரெட்டி விளக்கமளித்துள்ளார். அதில் “எனக்குப் பட வாய்ப்புகளும் இல்லை. ரியாலிட்டி ஷோக்களிலும் வாய்ப்புகள் இல்லை. அப்படி இருக்கையில் யுடியூப் சேனல் தொடங்கினேன். சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி என்று கேட்கலாம்? எனக்குப் பிடிக்காத போதும் கவர்ச்சி காட்ட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன். அந்த நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் வருமானம்தான் எனக்கு உதவியாக உள்ளது”எனக் கூறியுள்ளார்.