Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்னேஷ் சிவன் படத்தில் அஜித்துக்கு வில்லன் ஆகிறாரா தனுஷ்?

விக்னேஷ் சிவன் படத்தில் அஜித்துக்கு வில்லன் ஆகிறாரா தனுஷ்?
, சனி, 17 டிசம்பர் 2022 (08:41 IST)
அஜித் துணிவு படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் 62 படத்தில் நடிக்க உள்ளார்.

தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் நடித்து முடித்துள்ள அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்துல் நடிக்க உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர்  வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூ மாதத்துக்குள் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷை வில்லனாக நடிக்க விக்னேஷ் சிவன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் வடிவேலுடன் அமர்ந்து பேசத் தயார்- பிரபல நடிகர்