நடிகர் வடிவேலுடன் அமர்ந்து பேசத் தயார் என்று சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவர் 10 ஆண்டுகளாக அதிகம் சினிமாவில் நடிக்கவில்லை.
அவர் நடிப்பில், நீண்ட நாட்களுக்குப் பிறகு, சமீபத்தில், நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற படமும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில்,. நடிகர் வடிவேலு காமெடி குரூப்பில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் சிங்கமுத்து.
நிலப்பிரச்சனை தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்தது. இதனால், இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை.
இருவருக்கும் பட வாய்ப்புகள் குறைந்தாலும்கூட, வடிவேலுவும், சிங்கமுத்துவும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திழுக்கும்.
இந்த நிலையில், நடிகர் வடிவேலுவுடன் உட்கார்ந்து நான் பேசத் தயாராக இருக்கிறேன் என்று சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.