Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்டோவில் செல்லும் அஜித்தின் வீடியோ வைரல்

Advertiesment
ajithkumar
, வெள்ளி, 16 டிசம்பர் 2022 (19:05 IST)
நடிகர் அஜித்குமார்  ஆட்டோவில் பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார், சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக  நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். தன் ரசிகர் மன்றங்களை சில ஆண்டிற்கு முன் கலைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சசி அளித்தார்.

அதன் பின், அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும், தல என்று தன்னை அழைக்க வேண்டாமென அவர் அறிக்கை வெளியிட்டார்.

அதன்பின்னர் அவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், துணிவு படத்தின் நடித்துள்ள அஜித்குமார், தற்போது,  இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றி,  உலகச் சுற்றுப்பயணத்தின் முதல் பகுதியை முடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில், அஜித்குமார் ஒரு ஆட்டோவில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Edited By Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாய் சேகர் மொத்த கலெக்‌ஷனே இவ்வளவுதானா?