Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்களைக் கவர்ந்ததா தனுஷின் எமோஷனல் ட்ராமா ‘இட்லி கடை’… முதல் நாள் வசூல் நிலவரம்!

Advertiesment
தனுஷ்

vinoth

, வியாழன், 2 அக்டோபர் 2025 (07:32 IST)
தனுஷ் இயக்கத்தில் உருவான நான்காவது படமாக ‘இட்லி கடை’ நேற்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  தனுஷுடன் பல முன்னணி நடிகர்கள் நடிக்க படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றினார். படம் நேற்று ஆயுதபூஜை பண்டிகை நாளை முன்னிட்டு ரிலீஸானது.

குடும்ப செண்டிமெண்ட், இட்லி கடை எமோஷன், பள்ளிப் பருவ காதல், என சிம்பதி எமோஷனல் டிராமாவாக உருவாகியுள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த துயர சம்பவம் மற்றும் அது சார்ந்த அரசியல் சர்ச்சைகளால் இந்த படத்துக்கு பெரியளவில் ஓப்பனிங் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து இந்த படம் சுமார் 11 கோடி ரூபாய் அளவில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காந்தாரா 1 படம் வெளியாவதால் அந்த படத்தின் வெற்றியைப் பொறுத்தே ‘இட்லி கடை’ படத்தின் வசூல் ஏற்ற இறக்கம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜொலிக்கும் ஜிகினா உடையில் அசத்தல் போஸில் ஜான்வி கபூர்!