தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த அவர் தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் நடித்த தேவரா படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதையடுத்துத் தற்போது ராம்சரணோடு பெட்டி படத்தில் நடித்து வருகிறார். ஜான்வி இன்னும் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும்  அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்காகவே ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
 
									
										
			        							
								
																	சமீபத்தில் ஜான்வி கதாநாயகியாக நடித்த பரமசுந்தரி திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து அவர் தனது தாயாரின் சூப்பர் ஹிட் படமான சால்பாஸ் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். 1989 ஆம் ஆண்டு வெளியான சால்பாஸ் திரைப்படத்தில் ஸ்ரீதேவி இரட்டை வேடத்தில் நடிக்க ரஜினிகாந்த் மற்றும் சன்னி தியோல் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் தமிழில் வெளியான வாணி ராணி படத்தின் (இந்தி ஒரிஜினல் சீதா அவுர் கீதா) படத்தின் கதையைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இணையத்தில் அவரின் புதிய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.