Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயிலர் 2 படத்தில் தனுஷுக்கு ஒரு வேடமா? நெல்சன் போட்ட ஸ்கெட்ச்!

vinoth
திங்கள், 21 அக்டோபர் 2024 (10:46 IST)
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனால் உடனடியாக ஜெயிலர் 2 உருவாகும் என தகவல்கள் பரவின.

ரஜினியும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது.  இப்போது ரஜினி வேட்டையன் மற்றும் லோகேஷ் இயக்கும் ரஜினி 171 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு ஜெயிலர் 2 தொடங்கும் என சொல்லப்பட்டது. அதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். அந்த பாத்திரங்களுக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்திலும் அவர்களின் கதாபாத்திரத்தை நீட்டிக்க நெல்சன் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கூடுதலாக சில கதாபாத்திரங்களையும் அவர் சேர்க்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் தனுஷும் லிஸ்ட்டில் இருக்கிறாராம். தனுஷை ஜெயிலர் 2 படத்தில் இணைக்க ரஜினியும் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments