தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரின் நடிப்பில் தேவரா முதல் பாகம்கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பின் என் டி ஆர் நடித்த படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.
ஆனால் படம் வெளியான முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது. படத்தின் பல காட்சிகள் இணையத்தில் ட்ரோல் ஆகின. ஆனாலும் படம் திரையரங்குகள் மூலமாக மொத்தம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிட்டால் இது லாபம் தரும் வசூல் இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பில்லை என்று கருத்துகள் எழுந்தன.
ஆனால் தற்போது முதல் பாகம் ரிலீஸாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளதை அடுத்து தேவரா இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ளது படக்குழு. ஆனால் இன்னமும் முதல் பாகத்துக்கான சேட்டிலைட் வியாபாரமே நடந்து முடியவில்லை என்பதுதான் இதில் பெரும்சோகம்.