கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று அதிரடியாக இரண்டு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இன்னும் கைது நடவடிக்கை தொடரலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலுக்கான முதல் தகவல் அறிக்கையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரின் பெயர்களும் இருப்பதால், அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, இருவரும் முன்ஜாமீன் கோர இருப்பதாக கூறப்படுகிறது. இன்று அவர்கள் இருவரும் ஒன்றாக மனுவை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.