நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படத்தின் பாடல் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் மொழி திணிப்புக்கு எதிராக, தமிழ் மொழியின் சிறப்புகளை பேசும் வகையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், 'பராசக்தி' திரைப்படத்தின் 'நமக்கான காலம்' என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலின் வரிகளில் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் பாடல் பதிப்பில்: 'தமிழ் வாழ்க' என்று எழுதப்பட்டுள்ளது.
தெலுங்கு பாடல் பதிப்பில்: அதே இடத்தில் 'தெலுங்கு வாழ்க' என்று எழுதப்பட்டுள்ளது.
தெலுங்கு வெளியீட்டிற்காக இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், 'தமிழ் தீ பரவட்டும்' என்ற நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படத்தில் 'தெலுங்கு வாழ்க' என்று பதிவிட்டிருப்பது பல தமிழ் ரசிகர்களுக்கும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
மொழி பெருமை பேசும் படத்தில் இந்த மாற்றம் ஏன் என ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.