கொசுக்களால் கொரோனா பரவுமா என மத்திய சுகாதாரத்துறை பதில் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-க்கும் அதிகமான உள்ளது. எனவே இதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து எழும் பல கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை பதில் அளித்து வருகிறது. அந்த வகையில் கொசுக்களால் கொரோனா பரவுமா என்ற சந்தேகத்திற்கு பதில் அளித்துள்ளது.
கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது. கொரோனா பாதிப்புடைய மனிதர்களால் மட்டுமே அது மற்ற மனிதர்களுக்கு பரவுகிறது என தெரிவித்துள்ளனர். ஒருவரை விட்டு ஒருவர் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் தொற்றை முடிந்த வரை கட்டுப்படுத்த அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.
டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்கள் கொசுக்களால் பரவியது என்பதால் கொரோனாவும் கொசுக்களால் பரவுமோ என மக்கள் இனி அச்சப்பட தேவையில்லை என்பதை சுகாதாரத்துறை விளக்கிவிட்டது.