கோமாளி' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (19:10 IST)
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'கோமாளி' திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய புரமோஷன் செய்யப்பட்டுள்ளதால் இந்த படத்தின் ஓபனிங் வசூல் அபாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் 'கோமாளி' படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து, படத்திற்கு 'U' சான்றிதழ் கொடுத்துள்ளனர் மேலும் படக்குழுவினர்களை சென்சார் அதிகாரிகள் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் 100% உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 143 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 23 நிமிடங்கள் என்பதும் தெரியவந்துள்ளது
 
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யூக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிகுமார், யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

#Comali Gets ' U ' Certificate !
The Film Is not for 90's kids & 2k kids but it is also for kids

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இலவு காத்த கிளியான ராஷ்மிகா: தளபதியால் கடும் ஏமாற்றம்!