Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாட்டு புத்தகம்' வழங்கிய 'கோமாளி' படக்குழு: ரசிகர்களை 90களுக்கே அழைத்து செல்கிறதா?

Advertiesment
பாட்டு புத்தகம்' வழங்கிய 'கோமாளி' படக்குழு: ரசிகர்களை 90களுக்கே அழைத்து செல்கிறதா?
, சனி, 10 ஆகஸ்ட் 2019 (21:30 IST)
கடந்த 1990 சினிமா ரசிகர்களுக்கு பாட்டு புத்தகம் என்றால் என்னவென்று தெரிந்து இருக்கும். அந்த காலத்தில் ஒரு சினிமா, தியேட்டரில் வெளியாகும் போது பாட்டு புத்தகமும் கடைகளில் விற்க தொடங்கிவிடுவார்கள். படம் பார்த்த அனைவரும் பாட்டு புத்தகத்தையும் வாங்கி அந்த படத்தில் உள்ள பாடல்களை வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். நாளடைவில் சினிமா எலக்ட்ரானிக் மீடியாவாக மாறிய பின்னர் பாட்டுப் புத்தகம் என்பது வழக்கிலிருந்து ஒழிந்து விட்டது 
 
இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் கடந்த 90களில் நடக்கும் கதைகளில் ஒரு பகுதியாக வருவதால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விழாவிற்கு வந்த அனைவருக்கும் பாட்டுப் புத்தகத்தை படக்குழுவினர் வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாகும் தினத்தில் படம் பார்க்க வரும் அனைவருக்கும் பாட்டுப் புத்தகத்தை இலவசமாக கொடுக்கவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கோமாளி படக்குழுவினர்களின் இந்த புதிய முயற்சிக்கு சினிமா ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தங்களை 90களின் காலத்திற்கே படக்குழுவினர் அழைத்து சென்று விட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்
 
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யூக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிகுமார், யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டாரின் கழுத்தில் பாம்பை தூக்கிப் போட்ட ரசிகர் !