இலவு காத்த கிளியான ராஷ்மிகா: தளபதியால் கடும் ஏமாற்றம்!

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (18:54 IST)
தளபதி 64 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து காத்திருந்த ராஷ்மிகாவுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. 
 
கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்கல் மத்தியில் அதிக கவனத்தை பெற்றார். அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார்.
 
இந்நிலையில் தளபதி 64 படத்தில் இவர் நாயகியாக ஒப்பந்தமாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியானது. ராஷ்மீகாவும் அப்படிப்பட்ட வாய்ப்புக்கு காத்திருப்பதாகவும் பல முறை பேட்டிகளில் தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். 
ஆனால், நடிகை கியாரா அத்வானியிடம் தளபதி 64 படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். எனவே, இலவு காத்த கிளி போல ராஷ்மிகாவின் நிலைமை ஆகியுள்ளது. 
 
தளபதி 64 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் முகினை வெளியில் அனுப்புவதுதான் வனிதாவின் சதித்திட்டமா? - வீடியோ!