ரஜினியேப் பாராட்டினார் – கோமாளி சர்ச்சைக் குறித்து ஜெயம் ரவி விளக்கம் !

செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (08:54 IST)
கோமாளிப் படத்தில் இடம்பெற்றிருந்த ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்து ரஜினியே பாராட்டியதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அந்த  வீடியோவின் இறுதி காட்சியில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை படக்குழுவினர் கலாய்த்துள்ளனர். இதனால் கோபமான ரஜினி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கோமாளிப் படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறி வந்தனர். மேலும், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கோமாளி பட தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார் எனவும் செய்திகள் வெளியானது.

இதனால் அந்தக் காட்சியைப் படத்தில் இருந்து நீக்கவுள்ளதாகப் படக்குழுவினர் நீக்க முடிவெடுத்தனர். இதுபற்றி இப்போது பேசியுள்ள நடிகர் ஜெயம் ரவி ‘ சம்மந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்த ரஜினிகாந்தே, அதைப் பாராட்டினார்’ எனக் கூறியுள்ளார். ஆனாலும் சம்மந்தப்பட்ட அந்தக் காட்சியை  படத்தில் இருந்து எடுப்பதில் உறுதியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு இதுதான் உண்மையான காரணமா?