Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிளாமர் இன்ஸ்டா போஸ்ட் எல்லாம் வேஸ்ட்டா போச்சே... தனுஷ் மீது அதிருப்தியில் அனிகா சுரேந்திரன்..!

Advertiesment
Anika Surendran

Siva

, திங்கள், 30 ஜூன் 2025 (09:38 IST)
'என்னை அறிந்தால்', 'விஸ்வாசம்' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த, நடிகை அனிதா சுரேந்திரன், தனுஷ் இயக்கிய படத்தில் நாயகியாக நடித்த படம் படுதோல்வி அடைந்த நிலையில், அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் பெரும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
6 வயது முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் அனிதா சுரேந்திரன், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு முதல் முதலாக ஒரு மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடித்த நிலையில், அந்தப் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, தமிழில் ஹிப் ஹாப் ஆதி நடித்த 'ப்ரீத்தி சார்' திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர்தான் அவருக்கு தனுஷ் இயக்கத்தில் உருவான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தில் நாயகி வாய்ப்பு கிடைத்தது.
 
இந்தப் படம் வெற்றி பெற்றால் அவர் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. 16 வயது முதல் இன்ஸ்டாகிராமில் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு, கஷ்டப்பட்டு வாய்ப்புகளை பெற்ற நிலையில், தனுஷின் ஒரே படத்தால் தன்னுடைய சினிமா வாழ்க்கையே காலி ஆகிவிட்டது என்று அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 
மேலும், தற்போது அவருக்கு வரும் ஒரு சில வாய்ப்புகளும், இரண்டாவது நாயகி அல்லது கவர்ச்சி நடிகை கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்போது படத்தை எடுப்பதை விட விற்பது கடினமாகிவிட்டது- இயக்குனர் ராம் கவலை!