Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்பி சௌத்ரிக்கே தண்ணி காட்டியவர் ராஜகுமாரன்.. இப்படிலாம் நடந்துருக்கா?

Advertiesment
ராஜகுமாரன்

Bala

, வெள்ளி, 28 நவம்பர் 2025 (11:27 IST)
தேவயானி ராஜகுமாரன் திருமணத்தின்போது தெரிந்த நபர் ஒருவர் ஆர்பி சௌத்ரியிடம்  ‘சார் நீங்க தேவயானி திருமணத்திற்கு போகலையா’ என கேட்டாராம். அந்த கல்யாணம் நடந்தது தெரியுமா? என்றும் அந்த நபர் கேட்டிருக்கிறார். அதற்கு ஆர்பி சவுத்ரி அந்த திருமணத்திற்கு முன்பே நான் அவருக்கு 6 கோடி மெய் எழுதி விட்டேன் என கூறினாராம். என்ன நடந்தது என்றால் ராஜகுமாரன் இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படமே அவருக்காக எடுத்த படம் தான் என ஆர்பி சௌத்ரி கூறியிருக்கிறார்.
 
அந்த படத்தை முடிப்பதற்குள் ஆர் பி சவுத்ரியை படாதபாடு படுத்தி விட்டாராம் ராஜகுமாரன். ஏனெனில் ஆர்பி சவுத்ரியிடம் படம் பண்ணுவதற்கு அனைவரும் பயப்படுவார்கள். ஆனால் ஆர்பி சௌத்ரிக்கு தண்ணி காட்டியவர் ராஜகுமாரன் தான். விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தின் போது தான் ராஜகுமாரனுக்கும் தேவயானிக்கும் காதல் மலர்ந்து இருக்கிறது.
 
இவர்களுடைய லவ் பெரிய விஷயமாகி ஒரு பக்கம் சரத்குமாரும் விக்ரமும் டென்ஷன் ஆகி அந்த படப்பிடிப்பே களேபரமாக மாறி இருக்கிறது. ஏனெனில் அந்த காலத்தில் சரத்குமாரும் உச்சத்தில் இருந்த நடிகர். விக்ரமும் ஒரு பக்கம் சேது படத்திற்கு பிறகு அவருடைய மதிப்பும் உயர்ந்திருந்தது. ராஜகுமாரனை சரத்குமார் அடித்ததாகவும் அந்த நேரத்தில் ஒரு செய்தி இருக்கிறது.
 
ஏனெனில் சரத்குமார் விக்ரம் இவர்களை வர சொல்லி உட்கார வைத்துவிட்டு தனியாக தேவயானியை மட்டும் தனித்தனியாக ஷாட் எடுத்துக் கொண்டிருப்பாராம். அந்த படமும் ஒரு பைசாக்கக்கூட பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. அதை தான் ஆர்பி சவுத்ரி ஆறுகோடி மொய் எழுதியதாக கூறினார். இப்பொழுது இதற்கு இதைப்பற்றி பேசுகிறோம் என்றால் ராஜகுமாரன் தெரிந்து பேசுகிறாரா? இல்ல வாய்க்கு வந்ததை பேசுகிறாரா ? இல்ல மெண்டல் ஆகிவிட்டாரா என்று தெரியவில்லை .
 
அதுமட்டுமில்லாமல் ராஜகுமாரன் கமல் பற்றி கூறும் போது அவரை ஆஸ்கார் நாயகன் என்று சொல்கிறீர்கள். அவர் நடித்த படங்களிலேயே ஐந்து படம் தான் நல்ல படம். மற்ற எல்லா படமும் கமர்சியல் படம். அது எப்படி நீங்கள் ஆஸ்கார் நாயகன் என்று சொல்வீர்கள் என கேட்டிருந்தார். இது கூட கமலுக்கும் அவருக்கும் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்து இருக்கலாம் என்ற கடந்து போனாலும் அடுத்து யாருமே எதிர்பார்க்காத வகையில் ராமநாராயணன் மகேந்திரன் இவர்கள் இரண்டு பேரையும் ஒப்பிட்டு பகீர் கருத்தை தெரிவித்திருந்தார்.
webdunia
 
அதன் பிறகு ஆன்லைனில் எண்ணெய் விற்க்கிறேன்,சோப் விற்கிறேன்னு ஒரு லட்சம் கூட என் வாழ்க்கையில் நான் சம்பாதித்ததில்லை என்றெல்லாம் கூறியிருந்தார். அவரைப் பொறுத்த வரைக்கும் தேவயானியின் கணவர் என்ற ஒரு ஒரே ஒரு தகுதி மட்டும் தான் இருக்கிறது. அவர் எடுத்த படங்களில் நீ வருவாய் என திரைப்படம் மட்டும் தான் பேசப்படக்கூடிய படமாக இருந்தது. மற்றபடி இயக்குனர் என்ற தகுதி அவரிடம் கிடையாது . அப்படி இருக்கும் போது மகேந்திரன் பற்றி இழிவுபடுத்துகிறாரே.. அவர் துணி துவைக்கத்தான் லாய்க்கி என இந்த தகவலை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலுக்காக ஒரு மனிதன் எவ்வளவு தூரம் செல்வான்?... தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ எப்படி?- ரசிகர்கள் விமர்சனம்!