Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்தானம் அந்த படத்துக்கு சம்பளமே கொடுக்கல… ராஜகுமாரன் ஆதங்கம்!

Advertiesment
Santhanam

vinoth

, ஞாயிறு, 26 அக்டோபர் 2025 (08:52 IST)
இயக்குனர் விக்ரமன் பட்டறையில் இருந்து வந்து ‘நீ வருவாய் என’ மற்றும் ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் ராஜகுமாரன். பின்னர் தேவயானியைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் அவர் இயக்கிய படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை.

இதையடுத்து அவர் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அவரின் மோசமான நடிப்புக் காரணமாக இணையத்தில் கேலிக்கு ஆளானார். இந்நிலையில் சந்தானம் நடித்த ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்னும் படத்தில் காமெடி காட்சி ஒன்றில் ராஜகுமாரனை நடிக்கவைத்து தன் ஸ்டைலில் செம்ம கலாய் கலாய்த்திருந்தார். அந்த காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன.

இந்நிலையில் ராஜகுமாரன் அளித்த ஒரு நேர்காணலில் அந்த படத்துக்காக சந்தானம் தனக்கு எந்த சம்பளமும் தரவில்லை எனக் கூறியுள்ளார். அதில் “அந்த படத்தில் நடிக்க சந்தானம் ப்ளைட் டிக்கெட் போட்டார், தனி கேரவன் கொடுத்தார், தனி ரூம் கொடுத்தார். ஆனால் சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை. இவருக்கெல்லாம் எதற்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என நினைத்தாரா? அல்லது அவரிடம் இல்லாத பணமா என நினைத்தாரா தெரியவில்லை.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை!