2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மைசூரில் உள்ள ஒரு அரண்மணையில் படமாக்கி வருகிறார் பி வாசு. படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்களை எல்லாம் கங்கனா வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் சந்திரமுகி 2 படத்துக்கான தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இதையடுத்து லாரன்ஸ் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் பி வாசு. விரைவில் ஷூட்டிங் முடியவுள்ள நிலையில் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.