Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லால் சலாம் படத்தில் இத்தனை நாட்கள்தான் நடிக்கிறாரா ரஜினிகாந்த்?

லால் சலாம் படத்தில் இத்தனை நாட்கள்தான் நடிக்கிறாரா ரஜினிகாந்த்?
, செவ்வாய், 9 மே 2023 (08:50 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் பின்னர் திருவண்ணாமலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடந்தது.

இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்ளவில்லை. ஆனால் படப்பிடிப்பை பார்ப்பதற்காக ரஜினிகாந்த் திடீரென்று ஒரு நாள் சென்றிருந்தார். அதன் பின்னர் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளையும் பார்த்து இயக்குனரை பாராட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் படத்தில் ரஜினி சம்மந்தப்பட்டக் காட்சிகளை மும்பையில் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக ரஜினிகாந்த் மும்பைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திர பெயர் மொய்தீன் பாய் என்று அறிவிக்கப்பட்டு அவரின் தோற்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பாட்ஷா படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று தொடங்கும் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, 16 நாட்களில் தன்னுடைய மொத்தக் காட்சிகளையும் நடித்து முடித்துவிட்டு சென்னை திரும்புவார் என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் முதல்வரின் பயோபிக் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா விஷால்?