Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மொய்தீன் பாய் சுமார்.. இந்த பாட்ஷா பாயை பாருங்க! – லால் சலாம் ரசிகரின் போஸ்டர் ட்ரெண்டிங்!

Advertiesment
Laal salaam
, திங்கள், 8 மே 2023 (09:31 IST)
லால் சலாம் படத்தில் ரஜினியின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி அதிருப்தியை சந்தித்த நிலையில் ரசிகர் ஒருவர் செய்துள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் தயாராகியுள்ள படம் “லால் சலாம்”. நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் ரஜினிகாந்த் தோன்றுகிறார்.

ரஜினிகாந்தின் கதாப்பாத்திரம் என்னவாக இருக்கும் என பலரும் பல்வேறு யூகங்களை வைத்த நிலையில் நேற்று ரஜினிகாந்தின் கேரக்டர் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியராக ரஜினிகாந்த் தோன்றுகிறார். பின்னணியில் இந்தியா கேட் மற்றும் சில வன்முறை காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அந்த போஸ்டரில் ரஜினிகாந்த் முகம் சரியாக போட்டோஷாப் செய்யப்படாமல் சுமாராக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் பாட்ஷா படத்தில் வரும் ரஜினியின் கெட்டப்பை போட்டோஷாப் மூலமாக மொய்தீன் பாய் கேரக்டரில் செட் செய்து Fan made poster ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரிஜினல் போஸ்டரை விட இது நன்றாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் படத்தில் ரஜினிகாந்தின் மொய்தீன் பாய் கேரக்டர் பாட்ஷா போல ரௌத்திரமான கதாப்பாத்திரமா அல்லது அமைதியான இஸ்லாமியர் கதாப்பாத்திரமா என்று தெரியாத நிலையில், கதாப்பாத்திரத்தை மையப்படுத்தியே அவ்வாறான சாந்தமான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லியோ படத்தில் என் கேரக்டர் இதுதான்… உணமைய போட்டுடைத்த கௌதம்!