Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் வருகிறது லொள்ளு சபா… ஆனா இந்த வாட்டி ஹாலிவுட்ட வச்சி செய்யப் போறாங்க!

Advertiesment
மீண்டும் வருகிறது லொள்ளு சபா… ஆனா இந்த வாட்டி ஹாலிவுட்ட வச்சி செய்யப் போறாங்க!
, வெள்ளி, 20 ஜனவரி 2023 (09:37 IST)
சில வருடங்களுக்கு முன்பாக தமிழ் சின்னத்திரையுலகில் காமெடி தர்பார் நடத்திய லொள்ளு சபா இப்போது மீண்டும் புதிய வடிவில் ஒளிப்பரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி ஒளிப்பரப்பானக் காலகட்டததை விட இப்போது இணையதளங்களில் வெகுப் பிரபலமாக இருந்து வருகிறது. வாரம் ஒரு தமிழ் படத்தை எடுத்துக்கொண்டு அதன் அபத்தம், ஓவர் செண்ட்டிமெண்ட் மற்றும் சண்டைக்காட்சிகளை நக்கலடித்து அதன் ஸ்பூப் வடிவமாக வெளியாகிக்கொண்டிருந்தது.

இது ரசிகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் சினிமா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அதிருப்தியடைந்து போலிஸில் புகார் அளிக்கும் அளவுக்கு சென்ற சம்பவங்களும் உண்டு. சொல்லப்போனால் தமிழ்ப்ப்டம் போன்ற ஸ்பூப் படங்களின் முன்னோடி என லொள்ளு சபாவைக் கூறலாம்.

இந்நிலையில் இப்போது லொள்ளு சபா நிகழ்ச்சி வேறொரு வடிவத்தில் மீண்டும் வர உள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் “ஜோக்கிங் பேட்” என்ற பிரேக்கிங் பேட் நிகழ்ச்சியின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளனர். பிரேக்கிங் பேட் என்ற ஹாலிவுட் சீரிஸ் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்த வெற்றி பெற்ற சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா படம் ட்ராப்… அடுத்து சிவகார்த்திகேயன் பக்கம் நகரும் இளம் இயக்குனர்!