Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''உலக மேடையில் ஜெயிக்கனும் ''- உதயநிதிக்கு நடிகர் சந்தானம் வாழ்த்து

Advertiesment
''உலக மேடையில் ஜெயிக்கனும் ''-   உதயநிதிக்கு நடிகர் சந்தானம் வாழ்த்து
, புதன், 14 டிசம்பர் 2022 (15:41 IST)
தமிழ்நாட்டின் கனவு கனவாக வாழ்த்துகள் என்று அமைச்சர் உதய நிதிக்கு நடிகர் சந்தானம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மகனும் சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமைச்சரான உதயநிதி, இதுவரை விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது இரு மடங்கு அதாவது 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதற்கான கோப்பில்தான் கையெழுத்திட்டு உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சந்தானம் தன் டுவிட்டர் பக்கத்தில், தமிழ் நாட்டு இளைஞர்கள் இன்னும்  நிறைய கோப்பைகளும், பந்தயங்களிலும், போட்டிகளிலும் உலக மேடையில் ஜெயிக்க வேண்டும்,  இந்தக் கனவு  இனித் தமிழ் நாட்டில் நனவாக வாழ்த்துகள்’’ என்று அமைச்சர்  உதய நிதிக்கு வாழ்த்துகள்  தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உன் கூட எப்புடி? உறவினர்கள் கிண்டல் - ஹனிமூனை உதறிய மஞ்சிமா!