சந்தானம் மீண்டும் காமெடி பாதைக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த குலுகுலு திரைப்படம் படுதோல்வி அடைந்தது.
அதையடுத்து நடித்த ஏஜெண்ட் கண்ணாயிரம் படமும் தோல்விப் படமாக அமைந்தது. இதன் மூலம் சந்தானத்தைக் கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் பிடிவாதமாக கதாநாயகனாகதான் நடிப்பேன் என சந்தானம் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது தொடர் தோல்விகளால் மீண்டும் காமெடி பாதைக்கே அவர் திரும்ப உள்ளார் என சொல்லப்படுகிறது. முதல் படமாக அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் 62 படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.