வீர தீர சூரன் படத்துக்குப் பிறகு விக்ரம் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த படம் சிலக் காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் அதே நிறுவனத்துக்காக விக்ரம்  வேறொரு படத்தில் நடிக்கிறார்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	சமீபத்தில் அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை போடி K ராஜ்குமார் எனும் அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என தெரிகிறது. கடைசியாக விக்ரம் ஒரு அறிமுக இயக்குனர் படத்தில் நடித்தது 23 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சாமுராய் படத்தில். அந்த படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார்.
 
									
										
			        							
								
																	இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து யார் இந்த போடி ராஜ்குமார் என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவர் யாரிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றாமல் குறும்படங்கள்  இயக்கி அதன் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். அவர் இயக்கிய ஆமென் என்ற குறும்படம் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் எஸ் யு அருண்குமாருக்கு மிகவும் நெருக்கமான நண்பரான ராஜ்குமார் அருண் குமார் மூலமாகதான் விக்ரம்மை சந்தித்துக் கதை சொல்லும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அப்படிதான் அவர் விக்ரம் 63 ஆவது படத்தின் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.