Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலை நம்பாத ஒருவனின் மாற்றத்தை வெளிப்படுத்துவது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது - நடிகர் கவின்

Advertiesment
Kiss Movie

Web Desk

, சனி, 1 நவம்பர் 2025 (09:44 IST)

பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் தனது அறிமுக இயக்கமாக உருவாக்கியுள்ள திரைப்படம் "கிஸ்" இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

இதில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

மேலும் VTV கணேஷ், ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

‘கிஸ்’ திரைப்படம் அர்ஜுன் (கவின்) எனும் திறமையான இசைக்கலைஞரின் கதையைச் சொல்கிறது.

 

அவரிடம் ஒரு வினோதமான சக்தி உள்ளது — ஒரு ஜோடி முத்தமிடும் போதெல்லாம், அவர்கள் உறவின் எதிர்காலத்தை முன்கூட்டியே காண முடியும்.

 

காதலும் விதியும் மீது நம்பிக்கையற்ற அர்ஜுனின் வாழ்க்கை, மீரா (ப்ரீத்தி அஸ்ரானி) என்பவளைச் சந்தித்த பிறகு பெரும் மாற்றத்தை எதிர்கொள்கிறது.

 

அவள் அவனது நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தி, உண்மையான உணர்வுகளை உணரச்செய்கிறாள்.

 

காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த இந்த படம் — “காதல் விதியை மாற்றுமா?” என்ற கேள்விக்கான சுவாரஸ்யமான பதிலைச் சொல்லும் ஒரு கமர்ஷியல் ரொமாண்டிக் என்டர்டெய்னர் ஆகும்.

 

படம் குறித்து இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் கூறியதாவது:

 

‘கிஸ்’ படம் காதலின் மென்மையான உணர்வுகளைச் சொல்லும் அதே நேரத்தில், அதை சிந்திக்க வைக்கும் ஒரு கோணத்திலும் அணுகுகிறது.

 

இது உணர்வுப்பூர்வமான கதையாக இருந்தாலும், சில ஆச்சரியமான ஃபேண்டஸி அம்சங்களும் நிறைந்தது. புதிய குரல்களையும் கதைகளையும் ஊக்குவித்து வரும் ZEE5 தளத்தில் இப்படம் வெளியாகிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. என்றார்.

 

நடிகர் கவின் கூறியதாவது:

 

அர்ஜுன் கதாபாத்திரம் ஒரு சாதாரண ரொமாண்டிக் பாத்திரம் அல்ல.

 

அதில் பல சவால்களும் உணர்ச்சிகளும் நிறைந்துள்ளன. காதலை நம்பாத ஒருவனின் மாற்றத்தை வெளிப்படுத்துவது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.

 

இதுவரை பல இதயத்தைத் தொடும் தமிழ்ப் படைப்புகளை வெளியிட்ட ZEE5-ல் இப்போது ‘கிஸ்’ படமும் வெளியாகிறது என்பதில் மகிழ்ச்சி. என்றார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரி ரிலீஸிலும் சாதனை… முதல் நாள் வசூலில் கலக்கிய ‘பாகுபலி தி எபிக்’!