கடந்த பல ஆண்டுகளாக விக்ரம் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான ஒரு கமர்ஷியல் வெற்றிப் படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸான வீர தீர சூரன் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் இந்த படம் பெரியளவில் வசூல் செய்யவில்லை. திரையரங்கில் மொத்தமாக 50 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் அடுத்து  அவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த படம் சிலக் காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் அதே நிறுவனத்துக்காக விக்ரம் விக்ரம் ஒரு அறிமுக இயக்குனரின் கதையில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை போடி K ராஜ்குமார் எனும் அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் யாரிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றாமல் குறும்படங்கள்  இயக்கி அதன் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். இந்த படத்தின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என தெரிகிறது. கடைசியாக விக்ரம் ஒரு அறிமுக இயக்குனர் படத்தில் நடித்தது 23 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சாமுராய் படத்தில். அந்த படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார்.