Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்பதான் என்னை ஒரு மனிதனாகவே உணர்கிறேன்! - மனம் திறந்த கங்குவா வில்லன் நடிகர்!

Advertiesment
Bobby Deol

Prasanth K

, திங்கள், 27 அக்டோபர் 2025 (17:50 IST)

கங்குவா, அனிமல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இந்தி நடிகர் பாபி தியோல் தனது குடிப்பழக்கம் குறித்து மனம் திறந்துள்ளார்.

 

இந்தியில் பிரபல நடிகராக உள்ள பாபி தியோல், ஆஷ்ரம் வெப் சிரிஸ் மூலம் மேலும் பிரபலமடைந்தார். பின்னர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கிய அனிமல் படத்தில் வில்லனாக நடித்தார். தமிழில் கங்குவா, தெலுங்கில் டாக்கு மகராஜ் என பல படங்களில் வில்லனாக நடித்து கவனம் பெற்ற பாபி தியோல் தற்போது ஜனநாயகனிலும் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் தான் குடிப்பழக்கத்தை விட்டது குறித்து ஒரு செய்தியாளர் பேட்டியில் பேசிய பாபி தியோல் “நான் குடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டேன். நாம் எல்லாரும் வெவ்வேறு மரபணு கொண்டவர்கள். எந்த போதை நம் மரபணுவை பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கடவுள் எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

 

வாழ்க்கையில் இதுப்போன்ற வாய்ப்புகள் எப்போதும் கிடைக்காது. நான் குடிப்பதை நிறுத்திய பிறகு ஒரு சிறந்த மனிதனாக மாறி விட்டதாக நினைக்கிறேன். மேலும் பலருடனும் நன்றாக பழக ஆரம்பித்து விட்டேன்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெறும் ரூ.10,000 மட்டுமே தீபாவளி பரிசு கொடுத்த அமிதாப் பச்சன்.. சமூக வலைத்தளங்களில் கிண்டல்..!