Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது?!

Advertiesment
DInesh

vinoth

, வியாழன், 13 நவம்பர் 2025 (14:44 IST)
சீரியல் நடிகர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர் தினேஷ். பல சீரியல்களில் நடித்துள்ள அவர்  ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ரக்‌ஷிதாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து ரக்‌ஷிதா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் அடுத்தடுத்த சீசன்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அதனால் மேலும் சினிமா ரசிகர்களுக்கு தினேஷ் மேலும் பரிச்சயம் ஆனார். இந்நிலையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அவர் இன்று திருநெல்வேலியில் உள்ள பணகுடியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும்,

கருணாநிதி என்பவர் அளித்துள்ள புகாரின் படி “2022 ஆம் ஆண்டு BSc படித்துள்ள என் மகளுக்கு மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மூன்று லட்சம் ரூபாய் பணத்தை தினேஷ் பெற்றார். ஆனால் இதுவரை வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திரும்பத் தரவில்லை. அதைத் திருப்பிக் கேட்டதற்கு தினேஷும் அவர் தந்தையும் சேர்ந்து என்னைத் தாக்கினர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அது தவறான தகவல் என தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் கூறியபோது,  நான் கைது செய்யப்பட்டதாக தவறான தகவல்கள் பரப்பட்டுள்ளது. ஒரு வழக்கு விசாரணைகாக பணகுடி சென்றேன். எதிராளிகளின் செயலால் இது பரப்பட்டுள்ளது என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?